கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் நடைபெற்று வருகிறது . இதனால் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ்,டெம்போ டிராவல்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை சபரிமலையில் இருந்து கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்கள் வந்த பஸ் ஒன்று திடீரென பழுதாகி சிலுவை நகர் பகுதியில் சாலையோரம் மதில் சுவரில் மோதியது . இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசில் ஏற்படும் சூழல் இருந்த நிலையில் உடனடியாக சம்பவ இடம் வந்த போக்குவரத்து எஸ்.ஐ ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் இருந்து வாகனத்தை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 20 நிமிடத்தில் பழுதாகி நின்ற வாகனத்தை வெளியேற்றி போக்குவரத்தை நெரிசல் ஏற்படாத வகையில் துரிதமாக பணி செய்த போக்குவரத்து போலீசாரை பக்தர்கள் பாராட்டினார்.
















