திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி மஞ்சுளா(25). இவர் கணவரைப் பிரிந்து தனது (2). வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மஞ்சுளாவின் சித்தப்பா மகன் விக்னேஷுக்கும் புல்லாகவுண்டனூரை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திவ்யாவின் கணவருக்கு தெரிய வந்ததும் திவ்யா தனது குழந்தையுடன் மஞ்சுளா வீட்டிற்கு சென்று அங்கிருந்து விக்னேஷ் உடன் சென்று விட்டார்.
இது குறித்து திவ்யாவின் கணவர் கலைச்செல்வன், திவ்யாவின் தந்தை பத்மநாதன்(57). உறவினர்கள் கேசவன்(24). சதாசிவம்(57). கண்ணதாசன்(33). காளிங்கராயன்(58). ஆகியோர் மஞ்சுளா வீட்டிற்கு சென்று திவ்யா மற்றும் குழந்தை எங்கே என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து மஞ்சுளாவின் (2). வயது குழந்தையை கடத்தி சென்றனர். இது குறித்து மஞ்சுளா ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பத்மநாதன், கேசவன், சதாசிவம், கண்ணதாசன், காளிங்கராயன் ஆகிய 5 பேரை கைது செய்து குழந்தையை மீட்டனர் மேலும் தலைமறைவாக உள்ள கலைச்செல்வனை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















