தர்மபுரி: தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் திருமதி.ரேவதி தனிப்படை முரளி மற்றும் போலீசார் காரியமங்கலம் சந்திப்புகளில் கடந்த 29ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர் இதில் 210 மூட்டைக்கொண்ட 10.50 டன் ரேஷன் அரிசி கர்நாடக மாநிலம் பெங்களூர் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரேசன் அரிசி கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஈரோடு மாவட்டம் பவானி சித்தாறு பகுதியை சேர்ந்த சசிகுமார். விஜயகுமார் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி. திரு.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் தர்மபுரி கலெக்டர் திருமதி.திவ்யதர்ஷினி ரேஷன் அரிசி கடத்திய சசிகுமார் விஜயகுமார் இருவரையும் குண்டாசில் அடைக்க உத்தரவிட்டார் .