கடலூர் : கடலூர் விருத்தாசலம், விருத்தாசலத்தில் ஆலடி ரோடு பகுதியில்,விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஜெரால்டு, தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு . சிவானந்தம், திரு . கொளஞ்சி, தலைமை காவலர்கள் திருமதி.ஜெயந்தி, திரு .ராஜசேகர், காவலர் திரு திரு .மணிகண்டன், ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில், ஈடுபட்டனர். அதில், சக்தி நகரை சேர்ந்த சித்ரா (40), என்பவர் தனது வீட்டில், வைத்து விபசாரம் நடந்ததை காவல்துறையினர், கண்டுபிடித்தனா். இதையடுத்து வீட்டில் அதிரடி சோதனையிட்டனர்.
அப்போது, விருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சத்தியா (25), சித்ரா ஆகியோர் 4 அழகிகளை வைத்து விபசாரத்தில், ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 3 பேர் கைது மேலும் காவல்துறையினரின் அதிரடி சோதனையின் போது, அங்கு பிஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த வக்கீலான ராயர் (29), என்பவரும் அங்கு இருந்தார். இதையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் , பிடித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில், ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து சித்ரா, சத்தியா மற்றும் ராயர், ஆகியோரை கைது செய்தனர். மேலும் 4 அழகிகளை மீட்டு கடலூர் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர்.