காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி காவல்நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட
சரித்திரப் பதிவேடு ரவுடிகளான சூர்யா (எ) பாலாஜி 23) அன்னை சத்யா நகர், ஓரிக்கை , காஞ்சிபுரம் மற்றும் 2) செல்வம் 24 நாகாலத்து மந்தைவெளி தெரு, காஞ்சிபுரம் ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படி, விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர், காஞ்சிபுரம் அவர்கள் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்.