காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.இதையடுத்து காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் காவல் ஆய்வாளர் திரு.விநாயகம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாரதிதாசன்(30) என்பவரை பிடித்து சோதனை செய்த போது,மோட்டார்சைக்கிளில் இருந்த மூட்டையில் ரேஷன் அரசி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் பார்த்திபன்(47), ராஜேஷ்(38) ஆகியோருடன் இவர் கூட்டுச் சேர்ந்து வெளி மாநிலத்திற்கு கடத்தி வைப்பதற்காக 2 டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.