காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க
விஷ்ணுகாஞ்சி மற்றும் காஞ்சி தாலுக்கா ஆகிய காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு ரவுடிகளான கோபி (எ) கோழிகோபி 32 எண்.58, அண்ணா தெரு, BMS பள்ளி அருகே, காஞ்சிபுரம் மற்றும் துரைபாபு 29எண்.986, நேரு நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, காஞ்சிபுரம் ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படி விஷ்ணுகாஞ்சி மற்றும் காஞ்சி தாலுக்கா காவல்நிலைய காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர் காஞ்சிபுரம் அவர்கள் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்