விருதுநகர்: விருதுநகர் மாவட்ட உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விருதுநகர் முஸ்லிம் தெரு அருகில் வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ கொண்ட 37 மூடைகளிலிருந்த 1,850 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த ரேஷன் அரிசி மூடைகளை வைத்திருந்தவர்கள் யார் என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.