திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன், மேலரத வீதியை சேர்ந்த செல்லத்துரை. நகைக் கடை அதிபர். இவரது நகை கடையில் முக்கூடல், வடக்கு அரியநாயகிபுரம், தேரடி தெருவை சேர்ந்த மகாராஜன் (66). என்பவர் 2,05,534/- ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் செய்து தர வேண்டும் என்று கூறி அட்வான்ஸ் தொகையாக ரூபாய் 65, 000/- பணத்தை மட்டும் கொடுத்து நகைகளை பெற்றுக்கொண்டு மீதி தொகையை திருப்பி தராததால் மகாராஜன் மீது மாவட்ட குற்றப்பிரிவில் Cr.No 18/2005 u/s 420 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில் கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த மகாராஜனை கைது செய்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., உத்தரவின்படி (மாவட்ட குற்றப்பிரிவு- I) துணை காவல் கண்காணிப்பாளர், விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், L.G அன்னலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் குற்றவாளியைதேடி வந்த நிலையில் (31.03.2025) அன்று மகாராஜனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்