திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் 50 என்பவர் வள்ளியூர் இராதாபுரம் செல்லும் ரோட்டில் திருமலை ஜுவல்லரி என்னும் பெயரில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். இவரது நகை கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனதாக கடந்த 27.02.2022 அன்று வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா இ.கா.ப., அவர்கள் வழக்கின் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும்படி வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது, வள்ளியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.சாந்தி மற்றும் உட்கோட்ட தனிப்படை காவல் துறையினர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
மேற்படி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இராமசந்திரன் கடையில் வேலைபார்த்த சுபா 22, என்பவர் கடையில் இருந்து தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. மேற்படி குற்றவாளி சுபா மற்றும் அவரது அம்மா விஜயலட்சுமி 45 இருவரும் வள்ளியூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 18 இலட்சம் மதிப்புல்ல 41½ பவுன் தங்க நகைகள் மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு சாகுல்ஹமீது, வள்ளியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.சாந்தி, மற்றும் வள்ளியூர் உட்கோட்ட தனிப்படை காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப , அவர்கள் வெகுவாக பாராட்டினார்.