திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர்கள் காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன். இவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மதுரை மாவட்டம், தாசில்தார் நகரைச் சேர்ந்த பிரேம்குமார், அவருடைய மனைவி காளிஸ்வரி ஆகியோர் ரூ.4,05,000 பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து காளிதாஸ் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் 2006ஆம் ஆண்டு முதல் தலைமறைவான நிலையில் தேடப்பட்டு வந்த பிரேம்குமார், காளீஸ்வரி ஆகியோரை கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N.சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், அன்னலட்சுமி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமை காவலர்கள் முத்துராமலிங்கம், தமிழ்ச்செல்வி ஆகியோர் கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியில் தங்கியிருந்த பிரேம்குமாரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்