மதுரை: மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S. டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் தொடங்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று 05.05.2020-ம் தேதி B6-ஜெய்ஹிந்துபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் 178 ஏழை குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்