திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளியில் கலைப்பிரிவில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு ரூபாய் 17,000 மதிப்புள்ள கையேடுகள் மற்றும் நோட்டுக்கள் ஆகியவற்றினை நெய்க்காரப்பட்டி தலைமை காவலராக பணிபுரியும் ராஜேந்திர பிரசாத் அன்பளிப்பாக வழங்கினார்.
இப்புத்தகத்தினை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் மேலும் பள்ளி மாணவர்களின் தேச ஒற்றுமை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது,. இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி துணை ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.