காஞ்சிபுரம் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நடத்திய முதலாவது புத்தக திருவிழா நிறைவு நாள் விழா (02.01.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. புத்தகத் திருவிழாவில் சுமார் 1,50,00 பார்வையாளர்கள் கலந்துக்கொண்டு, சுமார் ஓரு கோடி மதிப்பிலான புத்தகங்களை 80,000 வாசகர்கள் பெற்றதாக நிறைவு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள். இப்புத்தக திருவிழாவில் 30,000 மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவியர்கள் பங்கேற்றனர், 12,000 மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவியர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிறைவு நாள் விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் பொது மக்களுக்கு சில அறிவுரைகள் வழங்கினார். அதில் பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்லும்போது காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும், அதனால் காவலர்கள் ரோந்து செல்லும் போது உங்கள் கண்காணித்து திருட்டு நடைபெறாமல் தடுக்க முடியும். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த மக்கள் முன் வர வேண்டும். சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடியில் மக்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும், இதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடம் காவல்துறையினர் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.Mசுதாகர், அவர்கள் கூறினார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்