தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட பகுதிகளில் குட்கா புகையிலை போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா IPS அவர்களின் உத்தரவின்படி கும்பகோணம் உட்கோட்ட துணைக் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர். திரு.கீர்த்திவாசன் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர். திரு.ராஜா காவலர்கள், திரு.பாலசுப்ரமணியன். திரு.நாடிமுத்து. திரு.ஜனார்த்தன். திரு.சேவியர்.திரு.பிரகாஷ் ஆகிய போலீசார் கும்பகோணம் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்கப்படுகிறதா என்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தார்கள்.
இந்நிலையில் கடந்த முன் தினம் 13-2-2022 அன்று கும்பகோணம் தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கும்பகோணம் புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது அவ்வழியாக வந்த டாடா சபாரி கார் ஒன்று நிற்காமல் சென்றதை கண்ட தனிப்படை போலீசார் அந்த காரை பல கிலோமீட்டர் தூரம் விரட்டி பிடித்தார்கள் அதன் பின்னர் காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 150 கிலோ தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அக்காரை ஓட்டி வந்த கார் ஓனரான கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம் அருகில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உத்தாராம் 36. மற்றும் அவரது நண்பர்களான திருநாகேஸ்வரம் மேலத்தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் வினேத் 32. ,கும்பகோணம் சீனுவாசநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் தமிழரசன் 60. ஆகிய மூவரையும் கைது செய்து அவர்கள் வந்த காரையும், கடத்தி வந்த 150-கிலோ குட்காவையும் கைப்பற்றினார்கள்
அதன் பின்னர் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி .பேபி அவர்கள் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களின் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்