திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் தனியார் மஹாலில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்களின் செல்போனை திருடிய பால்பாண்டி என்ற சுடுகாடு(27), என்பவரை வத்தலகுண்டு காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன,பால்பாண்டி என்ற சுடுகாடு செயின் பறிப்பு சம்பவம், திருட்டு சம்பவம், தடுப்பு காவல் உள்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என தெரிய வந்தன. இதனை அடுத்து வத்தலகுண்டு போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.1 லட்சம் பணம், ஏழு பவுன் தங்க நகை, 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா