கன்னியாகுமரி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 273 நபர்கள் மீது 183 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.