திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் காவலர்கள் தாலுகா ஆபிஸ் ரோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மதன் என்ற குழந்தைராஜ்(35), குணசேகரன்(38) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,21,000 மதிப்புள்ள 1,100 லாட்டரி சீட்டுகள், ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.