காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி கிராமத்தில் கிருஷ்ணா பேப்ரிகேஷன் பிரைவேட் லிமிடெட் பீனியா இண்டஸ்ட்ரியல் ஏரியா பேஸ் – 1 பெங்களூரு என்ற நிறுவனத்திற்கு சொந்தமான காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கிராமத்தில் உள்ள 3.98 ஏக்கர் நிலத்தின் அசல் ஆவணங்களை திருடி நிறுமங்கள் பதிவு அலுவலகத்தில் ROC – ல் போலியான ஆவணங்களை கொடுத்து மேற்படி இடத்தை அபகரிக்கும் உள்நோக்கத்துடன் செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திரு.ஆகாஷ் சவுத்ரி மேனேஜிங் டைரக்டர் கிருஷ்ணா பேப்ரிகேஷன் பிரைவேட் லிமிடெட் என்பவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு.அமல்ராஜ் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளர் திரு.சிவகுமார் புலன்விசாரணை மேற்கொண்டு சுமார் 120 கோடி மதிப்புள்ள புகார் தாரருக்கு சொந்தமான கூடுவாஞ்சேரி கிராமத்தில் உள்ள 3.98 ஏக்கர் நிலத்தின் அசல் ஆவணங்களை திருடி வைத்துக்கொண்டு கம்பெனி பதிவாளர் அலுவலகத்தில் போலியான சில ஆவணங்களை கொடுத்து மேற்படி இடத்தை அபகரிக்கும் உள்நோக்கத்துடன் குற்றவாளிகள் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது அதன் பெயரில் தலைமுறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் சங்கரன் பூங்கா தெரு NGO காலனி நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மாவட்டம் ராமமூர்த்தி மீனாட்சி நகர் GST ரோடு நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மாவட்டம் ஆகியோர்களை (28/3/2023), ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த தலைமுறைவு குற்றவாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்