காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாகி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆனது தனியார் கல்லூரி வளாக கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது புதிய வளாக கட்டிடமானது சுமார் 12 கோடி மதிப்பீட்டில் 4.50 ஏக்கர் பரப்பளவில் நான்கு தளங்களுடன் நகரத்திற்கு மையப்பகுதியில் மிக அருகாமையில் அமைந்து பொதுமக்கள் அனைவரும் எளிதில் அணுகத்தக்க வண்ணம் அமையபெற்றுள்ளது. இந்த வளாகம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உட்பட மாவட்ட காவல் துறையின் மாவட்ட தனிப்பிரிவு, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, இணைய வெளி குற்றப்பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, விரல் ரேகை பதிவு கூடம், ஆகிய அனைத்து சிறப்பு பிரிவுகளும் ஒருங்கே ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில் அனைத்து பிரிவுகளுக்குமான இடவசதி ஒதுக்கிடப்பட்டு ஒரு சிறந்த மாவட்ட காவல் அலுவலகமாக செயல்பட உள்ளது இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கட்டிட பணிகள் நிறைவடைந்து இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ராஜ் கமல்