திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல், விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது கடந்த 2022-ம் ஆண்டு கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 371 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 970 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 14 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டில் இதுவரை 3 மாதங்களில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதன்மூலம் அவர்களிடம் இருந்து 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.