திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் பழனி பட்டத்து விநாயகர் கோவில் பகுதியில் உள்ள மாவு கடையில் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் சாக்கு மூட்டைகளில் 1050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத்தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளரான முருகானந்தம் (56), என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா