நெல்லை: நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி,ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தேவையின்றி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் சென்ற 105 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து,103 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.