இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினரால் மீட்கப்பட்ட 10.92 இலட்சம் ரூபாய் பணத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உரிய நபரிடம் வழங்கினார்கள்.
















