தஞ்சை: தஞ்சை சீதா நகரில் வசித்து வருபவர் சாமிநாதன். பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்று இன்று காலை வீடு திரும்பி உள்ளார்.
வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சாமிநாதன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் வந்த காவல்துறையினர் கைரேகை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்