தேனி: வீரபாண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி தமிழ்ச்செல்வி (35). இவர் மதுரை மாவட்டம் அனுப்பானடியைச் சேர்ந்த கணேசன் மகள் அன்னலட்சுமி என்பவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி அனறு சுமார் 3 மணி அளவில் தமிழ்ச்செல்வி யை , காரில் வந்தவர்கள் அசிங்கமாக பேசி அடித்து சட்டையை கிழித்து மானபங்கப் படுத்தியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் அன்னலட்சுமி மற்றும் அடையாளம் தெரியாத பத்து நபர்கள் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.