திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, KTC நகர், AJR நகரைச் சேர்ந்த சாரதா 31. என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்களிடம் தூத்துக்குடி மாவட்டம், பூபாலராயபுரத்தை சேர்ந்த ராஜேஷ் ரெகுராம் (42) என்பவர் இந்திய கடலோரக் காவல்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 20 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு இந்திய கடலோரக்காவல்படையின் வேலைக்கு உரிய ஆணையைப் போலவே போலியான நியமன ஆணையை கொடுத்து ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். மேற்படி ராஜேஷ் ரெகுராம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம், சாரதா என்பவர் மனு அளித்தார்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன். ரகு, அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளி சென்னையில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ப.முத்து அவர்கள் தலைமையிலான, உதவி ஆய்வாளர் திரு. பவுல் மற்றும் தலைமை காவலர்கள் திரு. ஜான் போஸ்கோ, திரு. ஆல்வின் கில்பர்ட் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர் திரு. பழனி ஆகியோர் சென்னையில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு துரிதமான முறையில் செயல்பட்டு ராஜேஷ் ரெகுராம்யை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உள்ளனர். மேலும் குற்றவாளியிடமிருந்து மோசடி செய்த பணத்தில் வாங்கிய ஆடம்பர சொகுசு காரையும், ரூ 1 லட்சத்து 2 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து துரிதமான முறையில் செயல்பட்டு எதிரியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள் இனிப்பு வழங்கி பாராட்டி ஊக்குவித்தார்.