திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை நான்கு வழி சாலையில் (06.05.2025) அன்று பாளையங்கோட்டை காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், முத்துப்பாண்டி, சீனிமாரியப்பன் (33). செல்வம் (40). சுரேஷ் (39). அப்துல் காதர் (31). ஆறுமுகம் (39). மற்றும் லட்சுமணன் (37). ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 06 கிலோ கஞ்சாவையும், வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்