சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புகைப்பட கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் காரைக்குடி சுற்று வட்டார புகைப்பட கலைஞர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காரைக்குடி தேவர் சிலையிலிருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வழியாக சென்று காரைக்குடி பழைய பேருந்து வரை நடைபெற்றது. இப்பேரணியின் போது அனைத்து புகைப்படக் கலைஞர்களும் ஹெல்மெட் அணிந்து பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்பொழுது ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டும், விபத்தை தவிர்க்க வேண்டும்,சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி பேரணி மேற்கொள்ளப்பட்டது.
பேரணியை காரைக்குடி உதவி கண்காணிப்பாளர் ஆசீஸ் புனியா IPS தொடங்கி வைத்தார். உடன் காரைக்குடி உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் வடக்கு காவல் சார்பு ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் காரைக்குடி உட்கோட்ட போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் மாடசாமி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால் கரசு சுப்பிரமணி ரவிச்சந்திரன் மற்றும் காவல் ஆளுநர்கள் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு போக்கு போக்குவரத்து விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்க முடியும் விழிப்புணர் ஏற்படுத்தி அறிவுறுத்தினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















