திருநெல்வேலி : தமிழ்நாட்டில் காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்த தமிழக காவல்துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலி“ காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு “ஸ்மார்ட் காவலர் செயலி” யை செல்போனில் பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலத்தில் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போலீசாருக்கு “ஸ்மார்ட் காவலர் செயலி” காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், வாகன தணிக்கைக்கு பயன்படுத்தவும் காவல்துறையினருக்கு ஏதுவாக இருக்கும் எனவும், மேலும் காவலர்களின் அன்றாட பணிகளான Beat Duty, Summon Duty, Police Verification Duty, Petion Enquiry Duty, Tabal Service Duty, Court Duty மற்றும் Hospital Duty ஆகிய பணிகளை இந்த செயலி மூலமாக செயல்படுத்தி நல்ல முறையில் பணியாற்றிட வேண்டும் என முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அப்போது மாவட்டத்தில் ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மானூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு.முருகன், கங்கை கொண்டான் காவல்நிலைய தலைமை காவலர் திரு.தூர்க்கைசாமி ஆகியோரை , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார்.