திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் அருகே கொடைரோடு மாவுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா, இவர் அந்தப் பகுதியில் உள்ள மனமகிழ் மன்றத்திற்கு சென்று மது போதையில் அங்கு பணிபுரிந்த பணியாளர் ஆசை ராஜா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அங்கு இருந்த திருநங்கை ஒருவரை சேலையை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து காவல் திண்டுக்கல் கண்காணிப்பாளர் திரு .பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் அம்மைய நாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து வீடியோ வைரலான ஒரு மணி நேரத்தில் குற்றவாளி கார்த்திக் ராஜாவை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.