திண்டுக்கல்: திண்டுக்கல், பழநியை சேர்ந்த போஸ்ராஜன் இவருடைய 2 மகன்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி தாண்டிக்குடியை சேர்ந்த பரத், திருச்சியை சேர்ந்த ரஞ்சித்குமார் அவருடைய மனைவி தரங்கினி, முசிறியை சேர்ந்த ஜெயபால், துறையூரை சேர்ந்த சிவா, சசிக்குமார் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி பல்வேறு தவணைகளாக ரூ.90 லட்சம் பெற்று கொண்டு பணி நியமன ஆணைகளை அவர்கள் கொடுத்து உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வேலைக்கு சேர்வதற்கு சென்றபோது, அவை போலியானவை என தெரியவந்தது. போஸ்ராஜன் இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களிடம் புகார் அளித்ததை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் பரத், ரஞ்சித்குமார், தரங்கினி, ஜெயபால், சிவா, சசிக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சசிகுமார், ஜெயபால் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















