திருநெல்வேலி: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இனாம் வெள்ளக்கால் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி செல்வசுந்தரி 52, மற்றும் கயத்தாறு, மூர்திஸ்வரம் பகுதியை சேர்ந்த மருதன் என்பவரின் மகன் சுப்பிரமணியன் 51, இருவரும் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளமடையை சேர்ந்த மாடசாமி, என்பவரின் மகன் சதீஷ் தேவேந்திரன் என்பவருக்கு கால்நடை துறையில் வேலை வாங்கித் தருவதாக 25.06.2021அன்று 2 இலட்சத்து 5 ஆயிரம் பெற்று கொண்டு ஏமாற்றியுள்ளார்.
இதன் காரணமாக மாடசாமி மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு.ராமர்,அவர்கள் விசாரணை மேற்கொண்டு
குற்றவாளி இருவரையும் கைது செய்தார்.