சென்னை : இன்று சுமார் 12.55 மணி அளவில் சென்னை ECR ரோடு எண்.141 கவிதா சாலை உத்தண்டி சென்னை – 19 என்ற முகவரியில் மேக்ரோ யூனிக் சலூன் மற்றும் SPA என்ற பெயரில் நடத்திவரும் கட்டிடத்தில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருவதாக இடத்தில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு. அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களுடன் மேற்படி இடத்திற்கு சென்று சோதனை செய்பவர்கள் ஆறு பெண்களை அடைத்து வைத்து திருச்சி, திருவானைக்கோவில், ஜம்புகேஸ்வரர், நகரை சேர்ந்த வி.குமார் என்பவர் மேற்படி கட்டிடத்தில் சலூன் நடத்துவதாக உரிமம் பெற்று உத்தரபிரதேஷ் மாநிலம் ராமூரை சேர்ந்த ஆசிப் (20), என்பவரை மேலாளர் ஆக நியமித்து அவரை உதவிக்கு வைத்துக் கொண்டு கர்நாடகா, உத்தர பிரதேஷ், தஞ்சாவூர், சென்னை, ஊர்களில் இருந்து மேற்படி பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக வரவழைத்து எஸ்.பி.ஏ சலூன் என்ற பெயரை வைத்துக்கொண்டு அதில் விபச்சாரம் நடத்திய தெரியவந்தது.
இது சம்பந்தப்பட்ட மேற்படி குற்றவாளி ஆசிப் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றும் முக்கிய குற்றவாளியான குமார் தலைமறைவாக உள்ளார். பாதிக்கப்பட்ட ஆறு பெண்களும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட பிறகு கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆசிப்பிடம் இருந்தும் 4200 பணம் மேற்படி தொழிலுக்கு தொடர்பு கொள்வதற்காக வைத்திருந்த செல்போன் மூன்றும் காண்டம், இரண்டு பாக்கெட்களும் வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெறுவதற்காக பயன்படும் ஸ்வைப் மிஷின் இரண்டும் கைப்பற்றப்பட்டது. மேற்படி சம்பவம் சம்பந்தமாக விபச்சார தடுப்பு காவல் பிரிவு கானத்தூர் காவல் நிலையம் ஐ.டி.பி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் உள்ளது பொதுமக்கள் மேற்படியான விபச்சாரம் மற்றும் குற்ற செயல் நடப்ப தெரியவரும் பட்சத்தில் கீழ்கண்ட கைப்பேசி எண்ணிற்கு உடனடியாக தொடர்புகொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 98 40 42 05 59 எண்ணிற்கு தகவல் தருபவர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்