திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த நிலக்கோட்டை அருகே பள்ளபட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி(45). இவரிடம் ஆன்லைன் மூலம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் ஏமாற்றி 4 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய நைஜீரியாவை சேர்ந்த உச்சண்ணா கிறிஸ்டியன்(45). என்பவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் J.M.1 கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா மோசடி செய்த வாலிபர் உச்சண்ணா கிறிஸ்டியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா