திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாபெறும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது இந்த முகாமிற்கான ஆயத்த பணி குறித்து ஆலோசனை கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொன்னேரி பொறுப்பு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு துறையை சார்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முகாம் குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார். மேலும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டும் நெறிமுறைகள் பிரச்சாரங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார் காணொளி காட்சி மூலம் தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள விளம்பர படத்தை காண்பிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செல்வகுமார் பொன்னேரி வட்டாட்சியர் சிவகுமார் ஆவடி காவல் ஆணையர் பொன்னேரி உதவி ஆணையர் சங்கர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு