திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் கிராமத்தை சேர்ந்த 20பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு பிரார்த்தனைக்கு சென்று விட்டு வேன் ஒன்றில் வீடு திரும்பினர். பெரியபாளையம் அடுத்த ஜெயபுரம் பகுதியில் அதிகாலை நேரத்தில் வந்து கொண்டிருந்த போது டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 20 பேர் லேசான காயமடைந்து அருகில் உள்ள பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு