திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி வனசரகத்திற்கு உட்பட்ட நீலமலைக்கோட்டையில் காட்டுப்பன்றியை வேட்டையாடி, தனியார் தோட்டத்தில் வைத்து கறி சமைத்த நீலமலைக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (34), அவரது தம்பி கவியரசு (31), அதே ஊரை சேர்ந்த நாச்சியப்பன் (53) ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பன்றி இறைச்சி பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா