திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை பகுதியில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக வேடசந்தூர் டிஎஸ்பி இலக்கியா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி தனிப்படையினர் வடமதுரை பைபாஸ் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் குட்கா கடத்தி செல்வது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து டிஎஸ்பி தனிப்படையினர் காரில் வந்த வடமதுரையை சேர்ந்த முத்துவேல்(28). பாலமுருகன்(29). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 70 கிலோ குட்கா, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா