திண்டுக்கல்: வேடசந்தூர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் ஆய்வாளர்.பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர்,துணைக் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் வேடசந்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோடாங்கிபட்டி பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்து சிலர் தப்பியோடி விட்டனர். மேலும் காவல்துறையினர் 10 நபர்களை கைது செய்தனர். மேலும் 12 இருசக்கரங்கள் 2 கார் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4 சேவல்களை பறிமுதல் செய்தனர். இச்சம்வத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா