திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள கரூரிலிருந்து காரில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணித்த வாகனத்திற்கு வேடசந்தூர் அருகே சோதனை நடத்தப்பட்டது. கல்வார்பட்டி சோதனைச் சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வழக்கமான வாகன சோதனையின் ஒரு பகுதியாக இந்த சோதனையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா, சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















