சென்னை : சென்னை பெருநகர காவல் , புது வண்ணாரப்பேட்டை H-5 காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பு மற்றும் குயில் குப்பம், இந்திரா நகர், வ. உ .சி. நகர் பகுதியில் கனரக வாகனங்கள், லாரிகள் சென்று வருவதால் விபத்துகள் நிறைய நடப்பதால் புது வண்ணாரப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் திரு.நரசிம்மன் அவர்களிடம், பொதுமக்கள் நிறைய விபத்துக்கள் நடைபெறுவதால் வேகத்தடை அமைக்க கோரி மனு கொடுத்திருந்தனர்.
அதன்பேரில் ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு போக்குவரத்து ஆய்வாளர் வேகத்தடை அமைத்துக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் போக்குவரத்து ஆய்வாளர் நரசிம்மனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்