கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ நடராஜன் இல்லம் கோபி கார்டன்ஓசூர் டார்வின் சாய் சூப்பர் மார்க்கெட் அருகில் தங்க பாண்டியன் என்பவர் 13 ஆண்டுகளாக தன் குடும்பத்துடன் குடியிருந்து வேலை செய்து வருவதாகவும் (02.09.2025) ஆம் தேதி இரவு சுமார் 10.00 மணிக்கு மதுரையில் உள்ள தன் தம்பி மீனாட்சி சுந்தரம் என்பவரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றதாகவும் மீண்டும் (08.09.2025) ஆம் தேதி காலை சுமார் 08.30 மணிக்கு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து உள்ளே இருந்த வெள்ளி பொருட்கள் சுமார் 2 கிலோ, வைர மூக்குத்தி-1 மற்றும் பணம் ₹ 9,000 /- ரூபாய் திருடி சென்று விட்டதாக தங்கப்பாண்டியன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து வெள்ளி பொருட்கள், பணம் மற்றும் வைர மூக்குத்தி திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.