திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தொந்தி பிள்ளையார் சந்து பகுதியில் குடியிருக்கும் குமரேசன் வயது (58). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8ஆம் தேதி இவரது வீட்டில் 31/2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனதாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மர்ம நபரை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து துணைக் காவல் கண்காணிப்பாளர் . கார்த்திக் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர். வெங்கடாசலபதி, சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார்,குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்ட், தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் வீடு புகுந்து நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா