கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் ஜனகன் என்பவர் பழையூர் கிராமத்தில் குடியிருந்து வருவதாகவும் அவரது மனைவி சத்யா என்பவர் (01.09.2025) ஆம் தேதி மாலை சுமார் 5.00 மணிக்கு தன்னுடைய கால் கொலுசை இரண்டையும் கழற்றி வீட்டின் ஜன்னல் அருகே வைத்துவிட்டு அருகில் உள்ள வயலில் களை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் சுமார் 6.00 மணிக்கு வேலை முடித்து வந்து பார்த்தபோது தனது கால் கொலுசு காணவில்லை என தெரிந்ததாகவும் இடைப்பட்ட நேரத்தில் அதை ஊரை சேர்ந்த குற்றவாளி வீட்டின் அருகில் வந்து குடிக்க தண்ணீர் கேட்டு வாங்கி குடித்து விட்டு சென்றதாகவும் அவர் மீது தான் சந்தேகமாக உள்ளது என ஜனகன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வெள்ளி கால் கொலுசை திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து கொலுசை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.