தேனி : தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் தண்ணீர் அதிகமாக வருவதை கவனித்து ஆற்றின் நடுவில் உயரமான கல் பகுதி ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நான்கு சிறுவர்களை பத்திரமாக மீட்டனர்.