திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் (04.01.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், முகமது இஸ்மாயில் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது நேதாஜி சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மேலப்பாளையம் ராவுத்தர் தெருவை சேர்ந்த இப்ராஹிம் (54). என்பவரிடமிருந்து 220 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ 900/- ஐ பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்