கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரண்டப்பள்ளி Forest வனசரக அலுவலகம் அருகில் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை போலீசார் நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர் போலீசாரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். நிறுத்திய வாகனத்தை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 1,58,600/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள், ₹1,600/-ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபான பாக்கெட்கள் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள், மதுபானம் கடத்தி வந்த வாகனத்தை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
















