சென்னை : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் போதை இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக திரு.சங்கர் இ.கா.ப, காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் அவர்களின் உத்தரவுப்படி காவல் இணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்களின் மேற்பார்வையில், கஞ்சா வேட்டை சோதனையில் பிடிக்கப்பட்ட இரண்டு கஞ்சா வழக்குகளில் தலைமறைவு குற்றவாளியான கண்ணன் (45), என்பவரை பிடிக்க அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.தனம்மாள் அவர்கள், தலைமையில் தனிப்படை அமைத்து ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் சென்று (18/7/2023) அன்று 9:00 மணிக்கு தலைமறைவு குற்றவாளியை S.S ஹோட்டல் அனகாபள்ளி சோடவரம் ரோடு, ஆந்திர பிரதேசம் என்ற இடத்தில் அவரை கைது செய்து (19/7/2023) 11.00 மணி அளவில் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு அழைத்துவரப்பட்டு பின்னர் அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தபடுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குற்றவாளி மீது சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மூன்று கொலை வழக்குகள் உட்பட ,39 வழக்குகள் உள்ளன. மேலும் இவர் மீது ஓட்டேரியில் சரித்திர பதிவேடு உள்ளது. ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.தனம்மாள் அவர்களையும் அவர்களின் தனிப்படையினரையும் ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. முகமது மூசா