சென்னை : மொபைல் போன் மூலம் வாடிக்கையாளரை அணுகி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.12 லட்சத்தை ஏமாற்றிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த காவல் குழுவினருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு. இணையத்தில் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 8 .12 லட்சம் மோசடி செய்த வெளிமாநிலத்தை சேர்ந்த குற்றவாளிகளை ஜார்க்கண்ட் மாநிலம் சென்று கைது செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.